ரஷ்யாவை நடுங்கவைத்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை... அதிகரித்த இறப்பு எண்ணிக்கை

Vladimir Putin Russian Federation
By Arbin Mar 23, 2024 10:27 AM GMT
Report

ரஷ்ய தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 115 என அதிகரித்துள்ள நிலையில், தாக்குதல்தாரிகள் உட்பட 11 பேர்கள் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை 115

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இசை நிகழ்ச்சி ஒன்றின் போது அரங்கத்தில் நுழைந்து 5 துப்பாக்கிதாரிகள் சரமாரியாக சுட்டனர். இந்த கொலைவெறித் தாக்குதலில், சம்பவயிடத்தில் 40 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது இறப்பு எண்ணிக்கை 115 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை நடுங்கவைத்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை... அதிகரித்த இறப்பு எண்ணிக்கை | Gunmen Storm Set Fire To Concert Hall

இந்த நிலையில், தொடர்புடைய தாக்குதலுக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேர்கள் கைதாகியுள்ளதில், நால்வர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே, சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும், மற்றவர்கள் வளாகத்தில் ஏற்பட்ட பெரிய தீவிபத்திலும் இறந்தனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை நடுங்கவைத்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை... அதிகரித்த இறப்பு எண்ணிக்கை | Gunmen Storm Set Fire To Concert Hall

மேலும் தாக்குதலுக்கு பின்னர் ஆயுததாரிகள் உக்ரைன் நோக்கி விரைந்ததாகவும், நால்வர் உக்ரைன் எல்லையில் கைதாகியுள்ளதாகவும், அவர்களுக்கு உக்ரைனில் தொடர்பிருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது

இருப்பினும், தாக்குதல்தாரிகளுக்கும் உக்ரைனுக்கும் தொடர்பிருப்பதாக இதுவரை ரஷ்யா தரப்பில் இருந்து எந்த உறுதியாக ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை.

வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் Crocus City அரங்கத்தில் சோவியத் கால ராக் இசைக்குழு ஒன்று நிகழ்ச்சி நடத்த இருந்தது. இந்த நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 120க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவை நடுங்கவைத்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை... அதிகரித்த இறப்பு எண்ணிக்கை | Gunmen Storm Set Fire To Concert Hall

விமான நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் தலைநகர் முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, நாடு முழுவதும் அனைத்து பெரிய அளவிலான பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் இதுவரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US