முதல் ஓவரிலேயே ஆப்கானின் விக்கெட்டை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர்! சாம்பியன்ஸ் டிராஃபி காலிறுதியில் அதிரடி ஆரம்பம்
ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டக்அவுட் ஆனார்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இன்றையப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது. ஸ்பென்சர் ஜான்சன் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் எடுக்க தடுமாறினார்.
Spencer Starc 🎯 pic.twitter.com/pquGad5lK5
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 28, 2025
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கிளீன் போல்டு ஆனார். இதன்மூலம் முதல் ஓவரிலேயே ஆப்கான் அணி முக்கிய விக்கெட்டை இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்லும் என்பதால், அவுஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |