காற்றில் பறந்து வந்தும் அவுட்! கோபத்தில் பவுண்டரி எல்லை, நாற்காலியை அடித்த குர்பாஸ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய குர்பாஸ், ஆட்டமிழந்ததும் கோபத்தை காட்டியது வைரலாகியுள்ளது.
குர்பாஸ் 80
இங்கிலாந்து - ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஜட்ரான் 28 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், குர்பாஸ் அதிரடியாக அரைசதம் விளாசினார்.
அதன் பின்னரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிய குர்பாஸ் 57 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
காற்றில் தாவி வந்தும் அவுட்
ஷாஹிடி ஒரு ரன் ஓட முயற்சிக்க, மறுமுனையில் இருந்து குர்பாஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்தார். அதற்குள் டேவிட் வில்லி ஸ்டம்ப்பை த்ரோ செய்த பந்தை பட்லர் பிடித்து குர்பாஸை ரன்அவுட் செய்தார்.
கிரீஸை எட்டிவிட வேண்டும் என்று காற்றில் தாவி வந்தும் குர்பாஸ் ஆட்டமிழந்தார். இதனால் விரக்தியில் வெளியேறிய அவர் தனது பேட்டை தரையில் அடித்தார்.
பெவிலியன் செல்லும்போது தன் பேட்டைக் கொண்டு பவுண்டரி எல்லையை அடித்தார். பின்னர் நாற்காலி ஒன்றை அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
Tough luck ?
— Sportskeeda (@Sportskeeda) October 15, 2023
?: Disney+Hotstar #CricketTwitter #ENGvsAFG #CWC23 pic.twitter.com/bN2jHS7TCP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |