இலங்கை, பாகிஸ்தான் வீரர்களின் அபார சாதனையை முறியடித்த 21 வயது இளம் வீரர்!
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் புதிய சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
மிரட்டல் சதமடித்த குர்பாஸ்
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது.
இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 (151) ஓட்டங்கள் விளாசினார். அவரது சதம் வீண் ஆனாலும் சாதனைப்பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார்.
Getty Images
அதாவது, 23 போட்டிகளில் 5வது சதத்தை குர்பாஸ் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இலங்கையின் உபுல் தரங்கா (28), பாபர் அசாம் (25) ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார்.
ICC
IANS
சாதனைகள் படைத்த இளம் வீரர்
இந்த சாதனைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் குயிண்டன் டி காக் (19) முதலிடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் (19) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
21 வயது இளம் வீரரான குர்பாஸ் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 23 போட்டிகளில் 948 ஓட்டங்கள் குவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் (151) மற்றும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் குர்பாஸ் படைத்தார்.
AFP/GETTY IMAGES
அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக 150 ஓட்டங்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 148 ஓட்டங்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |