பறந்த சிக்ஸர்கள்! 36 பந்தில் 50 ஓட்டங்கள்..கடைசி ஓவரில் அபார வெற்றிபெற்ற அணி
ILT20 போட்டியில் கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது.
ஷார்ஜா 157 ஓட்டங்கள்
துபாயில் நடந்த ILT20 போட்டியில் முதலில் ஆடிய ஷார்ஜா வாரியர்ஸ் 157 ஓட்டங்கள் எடுத்தது.
சார்லஸ் 36 (32) ஓட்டங்களும், பிரிட்டோரியஸ் 36 (17) ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 23 (15) ஓட்டங்களும் எடுத்தனர். 
பின்னர் களமிறங்கிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜேம்ஸ் வின்ஸ் (James Vince) அதிரடியாக 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
குர்பாஸ் அதிரடி
குர்பாஸ், வின்ஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த மொயீன் அலி 14 ஓட்டங்களில் நடையைக்கட்ட, குர்பாஸ் அரைசதம் அடித்தார்.
அவர் 36 பந்துகளில் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஸா ஓவரில் அவுட் ஆனார்.
எனினும் ஓமர்சாய் அதிரடியாக 21 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாச, கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணி 19.4 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |