பெண் ஒருவரின் மறதியால் உடல் கருகி பலியான 46 பேர்: பகீர் சம்பவத்தின் பின்னணி
தைவானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில் 46 பேர்கள் உடல் கருகி பலியான நிலையில், அதன் பின்னணி தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த 13 மாடி குடியிருப்பில், பெண் ஒருவரின் மறதி காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தைவான் அதிகாரிகள் தரப்பு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.
அக்டோபர் 15ம் திகதி தெற்கு நகரமான காஹ்சியுங்கில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வர பல மணிநேரம் ஆனது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
மட்டுமின்றி, பல தசாப்தங்களுக்கு பின்னர் தைவானின் மிக மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், குறித்த தீ விபத்துக்கு காரணமான பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவரது குடியிருப்பில் தூபம் எரிந்து கொண்டே இருக்க அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறியதாகவும், தூபம் முழுவதுமாக அணைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த அவர் தவறிவிட்டார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அதுவே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 46 பேர்கள் உடல் கருகி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.