"ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைய வேண்டாம்" - மனைவியை பிரிந்த GV பிரகாஷின் பதிவு!
தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான GV பிரகாஷ் தனது ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மணவாழ்க்கையை முடித்துக்கொண்ட GV பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக திங்கட்கிழமை அன்று தெரிவித்திருந்தார்கள்.
பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்து, பெற்றோர் சம்பந்தத்துடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழந்து வந்தவர்கள் தற்போது பிரிந்துள்ளனர்.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினாலும் இவர்களுடைய பிரிவிற்கான காரணத்தையும் ஒரு சிலர் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக GV பிரகாஷ் புதிய அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
புதிய அறிக்கை வெளியிட்ட GV பிரகாஷ்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |