தீண்டாமை ஒரு பாவச்செயல்! கவின்குமார் ஆணவப்படுகொலை குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஆதங்கம்
தமிழகத்தில் ஐ.டி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
ஆணவப்படுகொலை
திருநெல்வேலியில் ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சுர்ஜித் என்ற நபர் கைதான நிலையில், அவரது எஸ்.ஐ பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணகுமாரியை பொலிஸார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் திரைபிரபலங்கள் கவின்குமார் படுகொலைக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார்
அந்த வகையில் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பதிவில்,
"தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
கவின்குமாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
தீண்டாமை ஒரு பாவச்செயல்
— G.V.Prakash Kumar (@gvprakash) July 29, 2025
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
Rest in peace #kavinkumar pic.twitter.com/Qte30xNU4g
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |