இளம்பெண்களிடம் அத்துமீறிய தாய் சேய் நல மருத்துவர்
சுவிட்சர்லாந்தில், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஐந்து இளம்பெண்களிடம் அத்துமீறிய தாய் சேய் நல மருத்துவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்களிடம் அத்துமீறிய மருத்துவர்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், தாய் சேய் நல மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஐந்து இளம்பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.

அத்துடன், தன் தாய்நாடான பிரான்சில் ஒரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
அகவே, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டவர்களுக்கு 180,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவராகப் பணி செய்யவும் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |