H-1B விசாதாரர்களின் ஆண்டு சம்பளத்தை விட... இந்தியாவில் கொந்தளிப்பு
H-1B விசா கட்டணத்தை இனி ஆண்டுக்கு 100,000 டொலர் என உயர்த்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளது, இந்தியாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பேரிழப்பை எதிர்கொள்ளும்
விசா கட்டணமாக அறிவித்துள்ள இந்த 100,000 டொலர் என்பது, புதிதாக H-1B விசா கைப்பற்றும் ஒருவரின் ஆண்டு சம்பளத்தை விட அதிகம் என்றும் அனைத்து H-1B விசா வைத்திருப்பவர்களின் சராசரி ஆண்டு சம்பளத்தில் இந்த கட்டணம் 80 சதவீதத்திற்கும் அதிகம் என்றும் கூறுகின்றனர்.
மட்டுமினி, அமெரிக்காவின் இந்த திட்டத்தால் அதிக பலனைபெற்ற இந்தியா, தற்போது பேரிழப்பை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த 100,000 டொலர் கட்டணமானது ஒவ்வொரு H-1B விசாவிற்கும் அந்தந்த நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
தற்போது 215 டொலர் பதிவுக் கட்டணமாகவும் 750 டொலர் நிறுவனங்கள் செலுத்தும் விண்ணப்பத்திற்கான கட்டணவுமாகவே உள்ளது. ஆனால், ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த 100,000 டொலர் கட்டணம் என்பது சராசரி H1B ஊழியர் ஒருவரின் கிட்டத்தட்ட முழு ஆண்டு ஊதியத்திற்கு சமமாக இருக்கலாம் என்றே இந்திய மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியர்கள் 71 சதவீதம்
2025ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், H1B விசா திட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவருக்கு சராசரியாக 97,000 டொலர் சம்பளமாக வழங்கப்படுகிறது. அவர் அந்த விசா திட்டத்தில் நீட்டிக்கப்பட்டால், சராசரியாக 120,000 டொலர் சம்பளமாக பெறலாம்.
இந்த நிலையில், ஆண்டு வருவாயை விட, விசா கட்டணம் அதிகமாக இருந்தால், யார் அதற்கு முன்வருவார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 399,395 H1B விசாக்களில், இந்தியர்கள் 71 சதவீதத்தைப் பெற்றனர்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா வெறும் 11.7 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், ட்ரம்பின் இந்த நடவடிக்கை என்பது, இந்தியர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் செயல் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |