எதிர்பாராத மழையில் சிக்கிய விமானம்: மூக்கு பகுதி உடைந்ததால் பரபரப்பு
மஜோர்காவிலிருந்து(Majorca) வியன்னா(Vienna) செல்லும் ஆஸ்டிரியன் ஏர்லைன்ஸ் (Austrian Airlines)விமானம் ஒன்று பயணத்தின் போது கடுமையான பனிக்கட்டி தாக்குதலில் சிக்கியது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் விமானம் 0S434 எதிர்பாராத இடியுடன் கூடிய மழை மேகத்தின் வழியாக பறந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரேடாரில் இந்த மழை மேகத்தைக் கண்டறிய முடியவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Austrian Airlines Airbus A320 Flight 0S434 landed safely on Sunday in Vienna after hail smashed the nose cone and damage both front windows. #airbusa380 #austrianairlines #aircraftmaintenance https://t.co/IONJyslrn0 pic.twitter.com/rW5HMU3khA
— modelcorner.co.uk (@modelcorner) June 11, 2024
சேதங்கள் இருந்தபோதிலும், ஏர்பஸ் A320 விமானம் வியன்னாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அத்துடன் விமானத்தில் இருந்த 179 பேரும் காயமடையவில்லை. சமூக வலைதள படங்கள் விமானத்திற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தை வெளிப்படுத்தின.
விமானத்தின் மூக்கின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது, மேலும் காக்பிட் windscreens ல் பல விரிசல்கள் காணப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |