கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அதன்படி, கூந்தல் வளர்ச்சிக்கு புரதம், பயோடின், இரும்புச்சத்து, மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம்.
அந்தவகையில், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 5 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1. முட்டை
முட்டையில் உள்ள பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுப்படுத்தி, சேதமடைந்த முடிகளைச் சரிசெய்து, கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றன.

2. கீரை
இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலைத் தடுக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

3 சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இதில் உள்ள பீட்டா-கரோட்டின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுக்கிறது. சரும எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் முடியின் வலிமையை அளிக்கிறது.

4. தயிர்
தயிரில் உள்ள புரதம் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. மேலும் அதில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வைக் குறைக்கிறது.

5. நெல்லிக்காய்
இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கிறது. மேலும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வைக் குறைக்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |