உங்களுக்கு அதிகமாக முடி உதிருதா? இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினையில் முடி உதிர்வு இருக்கின்றது.
இது தலைமுடி வறட்சி, இளநரை, பொடுகு என ஏராளமான காரணங்களால் இது வருகின்றது.
அதோடு தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம்.
முடி உதிர்வு அதிகமனால் ஆங்காங்கு வழுக்கையாகவோ தென்பட ஆரம்பித்துவிடும்.
இதனை போக்க வேண்டும் என்றால் நாம் ஒரு சில வழிகள் உதவுகின்றது. அதில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- அதிமதுரம் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பௌலில் தயிரை எடுத்துக் கொண்டு அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் சிறிது சிறிதாக அதிமதுரப் பொடியை அதில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் தலையை அலசிக் கொள்ளலாம்.
இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வரலாம்.