இரண்டே வாரத்தில் மூன்று மடங்கு முடி வளர வேண்டுமா? இந்த ஹேர்பேக் போதும்
முடி உதிர்தல், நரைத்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகள் மக்களை மிகவும் தொந்தரவு செய்கின்றன.
இதற்குக் காரணம் உங்கள் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மட்டுமல்ல, ரசாயன முடி சிகிச்சைகளும் இந்தப் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கின்றன.
முடி வேகமாக வளர இயற்கை பொருட்களை கொண்ட தயாரிக்கப்படும் இந்த ஹேர்பேக் பயன்படுத்தி பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- சாதம் ஊறவைத்த தண்ணீர் - 1 கப்
- ஆளி விதை ஜெல் - அரை கப்
- முட்டை வெள்ளைக்கரு - 1
- ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
அரை லிட்டர் கொதிக்கிற நீரில் ஒரு ஸ்பூன் ஆளி விதை சேர்த்து 5 நிமிடம் கொதித்த பின் ஜெல் பதத்திற்கு மாற ஆரம்பிக்கும்.
அதிகமாக திக்காவதற்கு முன்பு அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி ஆறிவிட்டால் திக்கான ஜெல் கிடைக்கும்.
2 ஸ்பூன் அரிசியை 1 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துவிடுங்கள்.
அரிசி ஊறிய பின் வடிகட்டிய நீரை கொதிக்க விட்டு அதில ஆளி விதை ஜெல்லையும் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து விடுங்கள்.
நன்கு திக்கானதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும். நன்கு ஆறிய பின் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயி்லையும் இதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை
இந்த ஹேர்பேக்கை தலையின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை அப்ளை செய்து 20-30 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள்.
பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள். முதல் முறை பயன்படுத்தும்போதே நல்ல பலன் கிடைக்கும்.
இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்து குளித்து வர, பலவீனமான முடி நன்கு பலமடையும். நுனி முடியில் இருக்கும் பிளவுகள் குறையும்.
மேலும் முடியின் சேதத்தை தடுத்து முடி உதிர்தலை பலப்படுத்தும். முடி திக்காகவும் வேகமாகவும் வளர ஆரம்பிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |