எரிவாயு டேங்கர் வெடித்து 50 பேர் மரணம்.. பிரபல கரீபியன் நாட்டில் பயங்கரம்
Haiti நாட்டில் எரிவாயு டேங்கர் வெடித்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை, Haiti நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான Cap-Haitien நகரில் இந்த கோரமான சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Cap-Haitien நகர மேயர் பேட்ரிக் அல்மோனர் (Patrick Almonor) கூறுகையில், இந்த பயங்கரமான வெடிவிபத்தில், 50 முதல் 54 பேர் வரை உயிருடன் எரிந்ததாகவும், அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
?? | 40 muertos por una explosíon en #Haití. pic.twitter.com/AT3fOJOQX8
— Página 13 (@pagina_13) December 14, 2021
மேலும், வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 20 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அல்மோனோர் கூறினார்.
அந்த வீடுகளுக்குள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை தற்போது கூற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கேப்-ஹைடியனின் கிழக்கு முனையில் உள்ள சான்மேரி பகுதியில் நள்ளிரவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கவிழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீப நாட்களாக Haiti-யில், சில கும்பல்கள் தாக்குதல் நடத்தி எரிவாயு இணைப்புகளை கைப்பற்றி வருவதால் அந்நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.