51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம்
2026 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஹைதி அணி தகுதி பெற்றும் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி
2026 ம் ஆண்டு உலக கோப்பை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் வைத்து நடைபெற உள்ளது.
இதன் தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கிட்டத்தட்ட 51 ஆண்டுகளுக்கு பிறகு சிறிய தீவு நாடான ஹைதி 2026 ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

சோகத்தில் ஹவுதி ரசிகர்கள்
உலகக் கோப்பை தொடருக்கு ஹைதி அணி தகுதி பெற்று இருந்தும் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் ஹைதி கால்பந்து போட்டியை நேரில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களாக ஹைதி உட்பட 12 நாடுகளை சேர்ந்த குடிமக்களை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளார்.
அதே சமயம் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக ஹைதி அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |