சவூதியில் 1000 ஹஜ் யாத்ரீகர்கள் மரணம்
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஹஜ் பயணம் சென்ற 1000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 1,081-ஆகி பதிவாகியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சுமார் 658 யாத்ரீகர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள் என்று அரபு தூதர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், ஜூன் 17ஆம் திகதி மெக்காவில் 51.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆனால், ஜூன் 18 அன்று, வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
அறிக்கையின்படி, ஜூன் 12 முதல் 19 வரை நடந்த ஹஜ் பயணத்தின்போது 70 இந்திய யாத்ரீகர்களும் இறந்துள்ளனர்.
இந்திய ஹஜ் கமிட்டியின் கூற்றுப்படி, இந்த ஆண்டு அதிகபட்சமாக 1,75,000 இந்தியர்கள் ஹஜ் யாத்திரைக்காக மெக்கா சென்றுள்ளனர்.
இந்தியர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் கேரள ஹஜ் அமைச்சர் அப்துர்ரஹிமான் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hajj pilgrims death toll 1000, Saudi Arabia, Hajj Pilgrimage