ஹஜ் பேரிடர்... 1100 கடந்த பலி எண்ணிக்கை: வழக்குத் தொடுத்த நாடு
புனித தலமான மக்காவில் ஹஜ் பயணிகள் பலர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில் எகிப்து அரசாங்கம் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்லது.
மேலாளர்கள் மீது வழக்கு
மொத்தம் 16 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ள எகிப்து அரசாங்கம், அவர்களின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளது. அத்துடன் அந்த நிறுவனங்களின் மேலாளர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமாக யாத்ரீகர்களை மக்காவுக்கு அனுப்பியுள்ளதாகவே கண்டறியப்பட்டுள்ளது. புனித தலமான மக்காவில் இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்கள் பலர் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்பட்டனர்.
பல நாடுகளை சேர்ந்த பயணிகள் மரணமடைந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 1100 கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எகிப்து நாட்டில் இருந்து பயணப்பட்டவர்களில் 658 பேர்கள் மரணமடைந்ததை அடுத்து, அதில் 630 பயணிகள் ஹஜ் நிர்வாகத்திடம் பதிவு செய்யாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய எகிப்து பிரதமர் Mostafa Madbouly உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகையானது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அளிக்கவும் முடிவாகியுள்ளது.
1.8 மில்லியன் மக்களுக்கு அனுமதி
பொதுவாக தனிப்பட்ட visit visa தாரர்கள் புனித தலமான மக்காவுக்குள் நுழைய அனுமதியில்லை. ஆனால் எகிபுது நிறுவனங்கள் தனிப்பட்ட visit visa-வில் பயணிகளை மக்காவுக்கு அனுப்பியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹஜ் தொடர்பில் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளுக்கு மட்டுமே சவுதி அரேபியாவால் அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சட்டவிரோதமாக பலர் மக்காவுக்குள் நுழைய முயன்று, சவுதி அரேபிய பாதுகாப்பு அமைப்புகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டும் வருகிறார்கள்.
ஹஜ் தொடர்பில் அதிக செலவுகளே பயணிகளை சட்டவிரோதமாக மக்கா செல்ல தூண்டுவதாக கூறப்படுகிறது. 2019ல் இருந்தே சட்டவிரோதமாக பயணப்படும் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் 1.8 மில்லியன் மக்களுக்கு ஹஜ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.6 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |