எம்பாப்பேவுக்கு விழுந்த அடி! PSG அணியை கைப்பற்றிய இருவர்
லீக் 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மார்செய்லே அணியை வீழ்த்தியது.
கலக்கிய ஹக்கிமி
Parc des Princes மைதானத்தில் நடந்த போட்டியில் PSG மற்றும் Marseille அணிகள் மோதின. ஆக்ரோஷமாக ஆட்டத்தை தொடங்கிய PSG அணிக்கு 8வது நிமிடத்தில் பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.
அச்ராஃப் ஹக்கிமி ஒரே ஷாட்டில் கோல் அடித்து மிரட்டினார். அதனைத் தொடர்ந்து PSG-யின் ராண்டல் கோலோ, 37வது நிமிடத்தில் ஹக்கிமி அடித்த ஷாட் கோல் போஸ்டில் பட்டு திரும்பி வந்தபோது துரிதமாக செயல்பட்டு கோலாக மாற்றினார்.
@PSG_inside (Twitter)
ராமோஸ் இரட்டை கோல்
பின்னர் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்த ராமோஸ், 89வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
கடைசி வரை மார்செய்லே அணியால் கோல் அடிக்க முடியாததால் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் 4-0 என மிரட்டல் வெற்றி பெற்றது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |