உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்
Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்
ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |