ஐரோப்பாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள்! WHO
ஐரோப்பாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான இன்ஸ்டிடியூட் கணித்துள்ளது.
2022 முதல் வாரத்தில் ஐரோப்பா பகுதியில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் காணப்பட்டன என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் Hans Kluge கூறினார்.
ஓமிக்ரான் வளர்ச்சி விகிதங்கள் பல நாடுகளில் குறைந்துவிட்டன அல்லது நிலையாக உள்ளன. ஆனால் அவை டெல்டாவை விட மிக அதிகமாக உள்ளன.
இதுவலை இல்லாத அளவு நோய்த்தொற்று காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும் இப்போது அதிகரித்து வருவதாக Hans Kluge கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.