பிரித்தானியாவில் சாக்லேட் சாப்பிட்டவர்களுக்கு தலைக்கேறிய போதை: பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை
பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட சிறிய அளவிலான சாக்லேட் பார்களில் ஹாலுசினோஜெனிக்(மாயத்தோற்றங்களை ஏற்படுத்த கூடிய) மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதிப்பு
பிரித்தானியாவின் மான்ஸ்ஃபீல்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட சிறிய தொகுப்பு சாக்லேட் பார்களில் ஹாலுசினோஜெனிக்(மாய தோற்றத்தை ஏற்படுத்த கூடிய) காரணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருள் சாக்லேட் பார்களை சாப்பிட்ட பொதுமக்கள் சிலர் உடல்நல கோளாறுக்கு உள்ளானதை தொடர்ந்து நாட்டிங்ஹாம்ஷயர் பொலிஸார் விசாரணையை தொடங்கினர். அத்துடன் சாக்லேட்-ஐ சாப்பிட வேண்டாம் என எச்சரித்து உள்ளனர்.
இது தொடர்பாக டிடெக்டிவ் காவலர் லூக் டோட் வழங்கிய தகவலில், சாக்கெட்களில் எந்தவொரு போதைப்பொருட்களும் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆனால் தடயவியல் சோதனையில், வணிக கடையில் காலி-கோல்ட் என குறிப்பிடப்பட்டு இருந்த ஆரஞ்சு நிற பெட்டிகளில் இருந்த சிறிய தொகுப்பு சாக்லேட் பார்களில் மட்டும் கஞ்சாவில் உள்ள மயக்கத்தை ஏற்படுத்த கூடிய சிலோசின் மற்றும் THC இருப்பது சிறிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட சாக்லேட் பார்களில் உள்ள அடையாளங்களுடன் ஒத்துப் போகும் சாக்லேட் பார்களை மக்கள் யாரும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Forensic testing has been carried out of the chocolate recovered by police.
— Nottinghamshire Police (@nottspolice) December 1, 2023
Read our update: https://t.co/WUHWlMfabD pic.twitter.com/gUqCRYnPtI
மேலும் அத்தகைய அடையாளங்களுடன் கூடிய சாக்லேட் பார்களை சாப்பிட்டு உடல் நல கோளாறு ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில், 63 வயதுடைய பெண் ஒருவர், தீங்கு விளைவித்த பொருட்களை கொடுத்ததற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |