இஸ்ரேல் இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல்: 260 பேர் சடலங்களாக மீட்பு
சனிக்கிழமை, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இருதரப்பினருக்குமிடையே தாக்குதல் தொடர்கிறது.
260 பேர் சடலங்களாக மீட்பு
இதற்கிடையில், காசா - இஸ்ரேல் எல்லையிலுள்ள பாலைவனப்பகுதியில் தங்கள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்கள் ஆயிரக்கணக்காக இஸ்ரேலிய இளைஞர்களும் இளம்பெண்களும்.
அப்போது, அதிகாலை 6.00 மணியளவில், அவர்கள் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியுள்ளது. திறந்த வெளியில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதால், பதுங்கக்கூட இடமில்லாமல் தப்பியோட முயன்ற பிள்ளைகள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அந்த இடத்திலிருந்து 260 உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் மீட்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கடத்தலும் வன்புணர்வும்
இப்படி தங்கள் நண்பர்கள் உயிரிழந்துகிடக்கும் அதே இடத்தில், அவர்களுடைய சடலங்களுக்கருகில் வைத்தே இளம்பெண்களை ஆயுதக்குழுவினர் வன்புணர்ந்ததாக தப்பி வந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.
BREAKING: Search and rescue mission at Nova festival next to Rei’m in Israel has been completed,
— Megh Updates ?™ (@MeghUpdates) October 8, 2023
260 bodies of Israeli civillians taking part in this peaceful festival were recovered
-Emergency services pic.twitter.com/rNMB8HTBN3
அத்துடன், பலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றுள்ளனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர். இளம்பெண் ஒருவரை மோட்டர் சைக்கிள் ஒன்றில் சிலர் தூக்கிச் செல்வதையும், அவர் பயந்து அலறுவதையும் காட்டும் வீடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன.
இதுவரை இருதரப்பிலும் மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தரப்பில் 700க்கும் அதிகமானோரும், காசா தரப்பில் 413 பேரும் உயிரிழந்துள்ளதாக இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அடிக்கடி மோதிக்கொள்வது சகஜம் என்றும், இதுவும் அப்படிப்பட்ட ஒரு மோதல்தான் என்று தாங்கள் நினைத்ததாகவும், ஆனால், இந்த தாக்குதல் வழக்கமான ஒன்றல்ல என்றும், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலில் உயிர் பிழைத்த Peleg Oren(26) என்பவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |