இவரையும் புதைத்து விடுவோம்: ஹமாஸ் புதிய தலைவருக்கு கடும் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்
காஸாவின் பின்லேடன் என பரவலாக அறியப்படும் யாஹ்யா சின்வார் ஹமாஸ் படைகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
பழி தீர்ப்போம்
இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்களில் ஒருவர் யாஹ்யா சின்வார் என்றே கூறப்படுகிறது. தொடர்புடைய தாக்குதலில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தும், உண்மையான எண்ணிக்கை இதுவல்ல என்றே பல்வேறு நாடுகளின் உளவுத்துறை சந்தேகம் எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், ஹமாஸ் படைகளின் அரசியல் தலைவாரக இருந்த இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தற்போது யாஹ்யா சின்வார் புதிய அரசியல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 31ம் திகதி தெஹ்ரானில் இருந்த ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர்கள் இரவோடு இரவாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தங்கள் கொலப்பட்டியலில் உள்ள அனைவரையும் பழி தீர்ப்போம் என்றே இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.
11 பேர்கள் கொண்ட அந்த கொலைப் பட்டியலில் ஐவர் மட்டுமே எஞ்சியுள்ளனர். சின்வாரை பொறுத்தமட்டில், தனது இளமைக் காலத்தின் சரிபாதி நாட்களை இஸ்ரேல் சிறையில் கழித்தவர். அங்கிருந்து விடுதலையானதன் பின்னர், மிகக் கொடூரமாப தலைவராக உருவானார்.
ஹனியே படுகொலை
தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மையான இலக்காகவும் உள்ளார். யாஹ்யா சின்வார் பெரும்பாலும் நகரத்திற்கு அடியில் ஏதேனும் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டுள்ளார் என்றே நம்பப்படுகிறது.
காஸா பிராந்தியத்தில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டாலும், ஹமாஸ் தலைவர்கள் உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவரையும் அழித்தொழிப்பதே தங்களின் இலக்கு என இஸ்ரேல் கூறி வருகிறது.
அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 11 மாதங்களாக தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,000 தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸா பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளது. சுமார் 2 மில்லியன் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஹமாஸ் தலைவர்களின் செல்வாக்கு மிக்கவர்களில் சின்வாரும் ஒருவர். இதனால் ஹனியே படுகொலை விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |