தெற்கு காசா தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி: இஸ்ரேலிய ராணுவம் தகவல்
இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி
புதன்கிழமை தெற்கு காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் பிளேட்டூன் தளபதி அதேல் ஜிகாத் முகமது அஸ்பூர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி அதேல் ஜிகாத் முகமது அஸ்பூர் இஸ்ரேலிய இராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் முக்கிய நபராக அறியப்படுகிறார்.

அத்துடன் ஹமாஸ் இராணுவ கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்த முகமது அஸ்பூர் தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், அதற்கான திட்டமிடலையும் அவர் தீவிரமாக செய்து வந்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை ரஃபா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |