சுற்றிவளைக்கப்பட்ட காசா..!ஹமாஸ் மூத்த பெண் தலைவர் கொலை: புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் மூத்த பெண் தலைவரான ஜமீலா அல் சான்தீ கொலை செய்யப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அகற்றும் நோக்கில் இஸ்ரேலிய ராணுவ படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காசா நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதுவரை ஹமாஸின் மூன்று ராணுவ தளபதிகளை கொன்று இருப்பதாக அறிவித்து இருந்தது.
அதே சமயம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர்.
மூத்த பெண் தலைவர் மரணம்
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் அரசியல் பிரிவு மூத்த பெண் தலைவரான ஜமீலா அல் சான்தீயை கொன்று இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காஸா சட்டசபையில் பணிபுரிந்த 2 பெண் தலைவர்கள் ஒருவரான ஜமீலா அல் சான்தீ, இஸ்ரேலிய ராணுவத்தால் நீண்ட நாட்களாக குறிவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்களின் குழு புகைப்படத்தில் உள்ள நான்கு தலைவர்களை சுட்டிக் காட்டி, அவர்கள் கொல்லப்பட்ட தினத்தை இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |