காசாவில் சடலங்களை தேடும் பணி தீவிரம்: இஸ்ரேலிடம் பிணைக் கைதியின் உடலை ஒப்படைத்த ஹமாஸ்
காசாவில் சிக்கியுள்ள பிணைக் கைதிகளின் உடலை மீட்பதில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தீவிரமடையும் தேடுதல் வேட்டை
காசாவில் இடுபாடுகளில் சிக்கிய இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள சடலங்களை மீட்க ஹமாஸ் படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம்
இந்நிலையில் ஹமாஸ் படையினர் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பிணைக் கைதி ஒருவரின் சடலத்தை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது.
இதனை இஸ்ரேலிய படைகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், முறையான அடையாளம் காணப்பட்ட பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் ஹமாஸ் படையினர் மொத்தம் 10 பிணைக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் இவர்களில் ஒன்பது பேர் மட்டுமே இஸ்ரேலியர் என்றும், பத்தாவது நபர் பிணைக்கைதி அல்ல என்றும் இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |