இஸ்ரேலிய உதவியதாக எழுந்த சந்தேகம்: 2 பேரை தூக்கிலிட்ட ஹமாஸ்
இஸ்ரேலுக்கு உதவிய இரண்டு நபர்களை ஹமாஸ் படையினர் தூக்கிலிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் தொகுப்பு பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் 25 பேரை ஹமாஸ் வாக்குறுதி அளித்தது போல் விடுவித்து இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது பிணைக் கைதிகள் பரிமாற்றம் இன்று நடைபெற்றுள்ளது, அதில் 13 இஸ்ரேலியர்கள் மற்றும் 4 வெளிநாட்டவர் என 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Hamas has released a second group of hostages. Among them are 13 Israelis and four foreigners. pic.twitter.com/8tScwCBud0
— NEXTA (@nexta_tv) November 26, 2023
அதே சமயம் முதல் தொகுப்பு பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் இஸ்ரேல் சிறையில் வாடிய 39 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தூக்கிலிட்ட ஹமாஸ் படையினர்
இதற்கிடையில் இஸ்ரேலுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவரை ஹமாஸ் படையினர் பகிரங்கமாக அனைவரின் முன்னிலையில் தூக்கிலிட்டுள்ளது.
பயங்கரவாத குழுவான துல்கர்ம் பிரிகேட், எச்சரிக்கை வழங்குவதற்காக இருவரும் தூக்கிலிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Hamas publicly executed two people suspected of collaborating with Israel
— NEXTA (@nexta_tv) November 26, 2023
The terror group Tulkarm Brigade said the two men were hanged "as a warning." pic.twitter.com/b6xwvhUWro
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |