ஒரு இஸ்ரேலிய வீரருக்கு 50 பாலஸ்தீனியர்கள்... ஹமாஸ் படைகளின் அடுத்த நகர்வு
ஹமாஸ் வசமிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க சர்வதேச அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், அந்த அமைப்பு புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
பாலஸ்தீன மக்களில் 50 பேர்
இஸ்ரேலில் சிறைவாசம் அனுபவிக்கும் பாலஸ்தீன மக்களில் 50 பேர்களுக்கு ஒரு இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்க தயார் என ஹமாஸ் அறிவித்துள்ளது. அல்லது ஒரு முதியவருக்கு பதிலாக 30 பாலஸ்தீனியர்களை விடுக்கவும் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னர், 500 பாலஸ்தீனிய கைதிகளுக்கு பதிலாக ஒரு ராணுவ வீரரை விடுவிக்க ஹமாஸ் தயார் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 50 கைதிகள் என்ற நிலைக்கு கீழிறங்கி வந்துள்ளனர் என்றே கூறப்படுகிறது.
இதுவரை தகவல் இல்லை
இதனிடையே, மூத்த ஹமாஸ் அதிகாரி Khalil al-Hayya தெரிவிக்கையில், இஸ்ரேல் அளித்துள்ள பதிலை தங்களது அமைப்பு விவாதித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேலின் பதில் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்த மாத தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கும் பொருட்டு 6 வாரகாலம் போர்நிறுத்தம், இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 40 பேர்களின் விடுதலை உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |