ஹமாஸ் ஆயுதக்குழுவால் கதறக் கதற கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்: தற்போது வெளியாகியுள்ள வீடியோ
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அப்போது வெளியான வீடியோக்களில், நோவா ( Noa Argamani, 26) என்னும் இளம்பெண் ஹமாஸ் குழுவினரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்படும் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கதறக் கதற கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்
நோவா என்னும் அந்த இஸ்ரேலிய இளம்பெண், என்னைக் கொன்றுவிடாதீர்கள் என கதறிய காட்சி, கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்தது.
இந்நிலையில், ஹமாஸ், நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நோவா, Yossi Sharabi (53) மற்றும் Itai Svirsky (38) ஆகிய மூவரும், போரை நிறுத்துங்கள், எங்களை மீட்டுச் செல்லுங்கள் என கோரும் காட்சி இடம்பெற்றுள்ளது.
வீடியோவின் இறுதியில், இவர்களுடைய தலைவிதி நாளை முடிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் இதுவரை தன் மகளுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்த நிலையில், இப்போது நோவாவின் வீடியோ வெளியானதால் அவரது தாயான Liroa மகள் உயிருடன் இருப்பதை அறிந்து ஆறுதல் அடைந்துள்ளார்.
ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியாததால், அவரது மகிழ்ச்சி நீடிக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.