ஹமாஸ் தலைவருக்கு மரண தண்டனை: இஸ்ரேலிய அமைச்சரின் வைரல் வீடியோ
Hamas leader will be hanged Israel defence minister video: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹமாஸ் தலைவருக்கு மரணத் தண்டனை கொடுக்க விரும்புவதாக இஸ்ரேலிய அமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜெருசலேமில் நகரில் நடந்த தாக்குதல்
1966ம் ஆண்டு இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பேருந்துகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 45 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக கூறி ஹமாஸ் இயக்க தலைவர் ஹசன் சலாமேவை இஸ்ரேலிய ராணுவம் அப்போது கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து நடைபெற்ற இஸ்ரேலிய நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கும் சட்டம்
பாலஸ்தீனியர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கடந்த மார்ச் மாதத்தில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், பல வருடங்களாக இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹமாஸ் உறுப்பினரான ஹசன் சலாமேவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
סגירת מעגל ענקית עבורי!
— איתמר בן גביר (@itamarbengvir) September 27, 2026
כנער עמדתי ברחובות והפגנתי אחרי פיגועי התופת הנוראיים בקו 18 בירושלים. עשרות חפים מפשע נרצחו, ומשפחות שלמות נחרבו.
לפני כשבועיים הגעתי לכלא ופגשתי פנים אל פנים את הארכי מחבל חסאן סאלמה - מבכירי חמאס, חברו ושותפו של יחיא סינוואר ימ״ש, שנשלח בידי הצורר… pic.twitter.com/6HvGFKAroJ
இஸ்ரேலிய அமைச்சரின் வீடியோ
இது தொடர்பாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தன்னுடைய X தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஆயுள் தண்டனை கைதியான ஹசன் சலாமேவுடன் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதில், “நான் உன்னை கொல்ல விரும்புகிறேன், நான் உனக்கு மரண தண்டனை விதிக்க விரும்புகிறேன் என அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் பேசுவது கேட்க முடிகிறது.
அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் வெளியிட்ட இந்த வீடியோவிற்கு பிறகு, இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற பாலஸ்தீன கைதிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக தொடங்கியுள்ளது.