ஹமாஸ் செய்தித் தொடர்பாளருக்கு வைக்கப்பட்ட குறி! தீவிரமடையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேலிய இராணுவத்தின் “குறைவற்ற செயல்பாடு” என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தன்னுடைய X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை, ஆனால் காசாவின் அல்-ரிமால் பகுதியில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது.
உறுதிப்படுத்தாத ஹமாஸ்
ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், அல்-ரிமால் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |