பணயக்கைதிகள் விடுவிப்பு அடுத்து எப்போது... ஹமாஸ் படைகள் வெளியிட்ட தகவல்
காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படைகள்
எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் படைகளின் அதிகாரி ஒருவர் கூறிய நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வரும் வாரங்களில் 90க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது.
சுமார் 15 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த கொலைவெறித் தாக்குதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஹமாஸ் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பிடிக்கபட்டவர்களுக்கு ஈடாக, அடுத்த பிணைக் கைதிகள் குழு சனிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீனிய கைதிகள்
ஆனால், பணயக்கைதிகள் எதிர்வரும் ஞாயிறன்று விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாக விடுவிக்க உள்ளனர்.
ஏற்கனவே மூவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து தற்போது நால்வரை விடுவிக்க ஹமாஸ் படைகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. குறித்த தகவலை இஸ்ரேல் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
காஸாவில் நீடிக்கும் 15 மாதகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இந்த மாதம், இஸ்ரேலும் ஹமாஸ் படைகளும் மூன்று கட்ட போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்ததன் மூலம் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. பதிலுக்கு பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் சிறை பிடிக்கப்பட்டவர்களையும் இஸ்ரேல் விடுவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |