காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டம்: அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை
காசா பொதுமக்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், காசா பொதுமக்கள் மீது உடனடி தாக்குதல் நடத்த ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவேளை ஹமாஸ் காசா பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இது இருதரப்பு இடையே மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
வெளியான அறிக்கையில், ஒப்பந்தம் மீறப்பட்டால் அதற்கான உடனடி பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காசா மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமைதியை நிலைநாட்ட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |