காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹமாஸ் அரசியல் தலைவர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர்
காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்
கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அரசியல் அலுவலக உறுப்பினர் பர்தவீல் மற்றும் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஹமாஸ் ராணுவ கட்டமைப்பை அழிப்பதே இலக்கு!
ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்பை முழுமையாக அழிப்பதே இஸ்ரேலின் முக்கிய குறிக்கோள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, தெற்கு காசாவில் ஹமாஸ் ராணுவ உளவுத்துறை தலைவர் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்கள் இப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |