காசாவில் மீண்டும் ஓங்கும் ஹமாஸின் கை: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு பறந்த ரகசிய சர்வே
காசாவில் ஹமாஸ் படைகள் மீண்டும் தங்கள் நிலைகளை மீண்டும் வலுப்படுத்தி வருவதாக இஸ்ரேஎல் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ஆதிக்கம்
டிரம்பின் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, தாக்குதல் நடவடிக்கைகளை இஸ்ரேல் கைவிட்டுள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் படைகள் மீண்டும் காசாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

திங்கட்கிழமை இது தொடர்பான ரகசிய அறிக்கையை இஸ்ரேலின் ரகசிய உளவுத்துறை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் சமர்ப்பித்துள்ளதாக சேனல் 13 செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஹமாஸ் படையினர் காசாவில் மீண்டும் தங்கள் நிலைகளை நிலைநிறுத்த எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் அத்துமீறும் ஊடுருவல் நடவடிக்கை
ஹமாஸ் படையினர் தங்கள் செயல்பாட்டாளர்களை நாட்டின் அரசு மருத்துவமனை, பாதுகாப்பு அமைப்புகளில் நுழைத்து தங்கள் அதிகாரத்தை மறைமுகமாக நிலைநாட்ட ஹமாஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் நிர்வாக கட்டுப்பாடு மற்றும் சமூக தாக்கங்கள் ஆகியவற்றில் ஹமாஸ் படையினரின் கை ஒங்கியுள்ளது.
அத்துடன் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் ஹமாஸின் நிர்வாகத்தை முழுமையாக முடக்க முடியவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |