போர் நிறுத்த ஒப்பந்தம்: மூன்றாவது கட்ட பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு மூன்றாவது கட்டமாக விடுவிக்கும் 8 பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மூன்றாவது கட்டமாக
15 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
தற்காலிக போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, 120க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இரண்டு கட்டங்களாக 7 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ், தற்போது மூன்றாவது கட்டமாக விடுவிக்கபோகும் பிணைக்கைதிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிணைக்கைதிகள்
அதன்படி 8 பேரின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள் இன்று விடுவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "இந்த வாரம் இரு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர் உட்பட, பிணைக்கைதிகள் 11 பேர் விடுவிக்கப்படுவர். ஹமாஸ் இதுவரை 7 பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக கைதிகள் 290 பேர் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்" என தெரிவித்துள்ளனர்.
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |