ஹமாஸ் படைகள் வெளியிட்ட பணயக்கைதிகளின் புகைப்படங்களால் மீண்டும் பதற்றம்
தங்கள் பிடியில் உள்ள எஞ்சிய 47 இஸ்ரேல் பணயக்கைதிகளின் புகைப்படங்களையும் ஒன்றாக தொகுத்து ஹமாஸ் படைகள் வெளியிட்டுள்ளது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸா மீதான தாக்குதல்
இது பிரியாவிடை புகைப்படம் என்றும், ஒவ்வொரு புகைப்படத்தையும் Ron Arad என அடையாளப்படுத்தியுள்ளதுடன், ஒரு இலக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 1986ல் ஹமாஸ் படைகளிடம் சிக்கிய இஸ்ரேலிய விமானப்பட விமானி இந்த Ron Arad.
காஸா போர் நிறுத்தத்தை நிராகரித்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை குற்றஞ்சாட்டியுள்ள ஹமாஸ், இஸ்ரேலில் எதிர்ப்பு இருந்தும் காஸா மீதான தாக்குதல் தொடர்வதையும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ள 47 பணயக்கைதிகளின் புகைப்படங்களில் 20 பேர்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும்,
2 பேர்கள் மிக மோசமான கட்டத்தில் உயிருக்கு போராடுவதாகவும் எஞ்சியவர்கள் அனைவரும் மரணமடைந்துள்ளனர் என்றே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் படைகளின் al-Qassam பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
உங்கள் கைதிகள் காஸா நகரத்தின் சுற்றுப்புறங்களுக்குள் வெளியேற்றப்பட்டுள்ளனர், நெதன்யாகு அவர்களைக் கொல்ல முடிவு செய்யும் வரை நாங்கள் அவர்களின் உயிரைப் பற்றி கவலைப்பட மாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் ஏற்படும்
மேலும், அன்று Ron Arad-க்கு ஏற்பட்ட அதே நிலை இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். ஜனவரி மற்றும் மார்ச் 2024 க்கு இடையிலான போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸ் படைகள் 30 பணயக்கைதிகளை விடுவித்தது.
அதில் 20 இஸ்ரேலிய பொதுமக்கள், ஐந்து வீரர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டவர்கள். கொல்லப்பட்ட எட்டு இஸ்ரேலிய கைதிகளின் உடல்களையும் அவர்கள் விடுவித்தனர்.
மே மாதத்தில், ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன மக்களை விடுவித்தது. தற்போது ஹமாஸ் படைகள் வெளியிட்டுள்ள Ron Arad புகைப்படத்தால், புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் மேலும் உக்கிரமாக தாக்குதலை நடத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பணயக்கைதிகள் தொடர்பில் நெதன்யாகு அரசாங்கம் கண்டுகொள்ளாது என்றே பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |