ஹமாஸ் அமைப்புக்குள் எழுந்த முரண்பாடுகள்: ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை!
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஓரினச்சேர்க்கையாளர்களை தூக்கிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ஹமாஸின் கொடூர தாக்குதலும் இஸ்ரேலின் பதிலடியும்
கடந்த 2023 ஆம் ஆண்டில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஒரு பயங்கர தாக்குதலை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக போர் பிரகடனம் செய்ததுடன் காசா மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் காசாவில் இருந்த பாலஸ்தீன மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் தலையிட்டு இடைக்கால போர் நிறுத்தம் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தின. இதன் விளைவாக, 2023 நவம்பரில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த போர் நிறுத்தத்தின் போது, 100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்களும் பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹமாஸின் உள் முரண்பாடுகள்
இந்த நிலையில், ஹமாஸ் தனது சொந்த அமைப்பினரையே சித்திரவதை செய்து கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தான் காரணமாக கூறப்படுகிறது.
காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஹமாஸின் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி கூட ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் ஹமாஸின் உள் முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் இஸ்ரேலை எதிர்த்து போராடும் ஹமாஸ், மறுபுறம் தனது சொந்த அமைப்பினரின் மனித உரிமைகளை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |