காசாவை குண்டு வீச்சு தாக்குதலால் சீர்குலையும் இஸ்ரேல்: இணைய சேவைகள் மீண்டும் துண்டிப்பு
காசா மீது அதிகமான குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் தாக்குதல்
ஹமாஸ் இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சுற்றி வளைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டும் வரை இந்த போர் தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
The Israeli army has reached the shores of the Mediterranean Sea, thus completely encircling Gaza
— NEXTA (@nexta_tv) November 5, 2023
Gaza Strip divided into north and south, humanitarian corridor will continue to operate. pic.twitter.com/NLr5B7AFLk
அதைப்போல் காசாவிற்கு நுழைந்து தாக்குதல் நடத்தும் அனைத்து இஸ்ரேலிய வீரர்களையும் பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவிரமடையும் குண்டு வீச்சு தாக்குதல்
இந்நிலையில் காசா நகர் மீது தீவிரமான குண்டு வீச்சு தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருப்பதாக ஹமாஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ள தகவலின் படி, போர் தொடங்கிய 30 நாட்களில் காசா இதுவரை பார்த்திராத குண்டு வீச்சு தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
❗️ Gaza Strip has come under heavy Israeli bombardment - Anadolu, citing a Hamas statement
— NEXTA (@nexta_tv) November 5, 2023
Local media say Gaza is now experiencing the heaviest bombardment in 30 days of war. According to a local provider, the enclave has once again lost communications and internet service. pic.twitter.com/qMTGEN5cbt
மேலும் இப்பகுதிகளில் மீண்டும் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |