வெளிநாடுகளில் தஞ்சம் அடைய ஹமாஸ் முயற்சி: கைவிரித்த சர்வதேச நாடுகள்
வெளிநாடுகளில் தஞ்சம் அடைய ஹமாஸ் அமைப்பினர் முயற்சித்தது தெரியவந்துள்ளது.
புகலிடம் கோரும் ஹமாஸ்
இஸ்ரேல் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரம் பல்வேறு சர்வதேச நாடுகளிடம் புகலிடம் கோரி முயன்று இருப்பதாக இஸ்ரேலின் “சேனல் 12” தகவல் தெரிவித்துள்ளது.
திங்களன்று வெளியான அறிக்கையில், துருக்கி மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளிடம் ஹமாஸ் புகலிடம் கோரியதாகவும், ஆனால் இந்த கோரிக்கை அனைத்து நாடுகளும் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பின் இந்த முயற்சி இஸ்ரேலுக்கு தெரிவிக்க பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிடுவதுடன் காசா அரசின் மீதான கட்டுப்பாட்டையும் கைவிட வேண்டும்.
அத்துடன் ஹமாஸ் அமைப்பினர் காசா நகரை விட்டு வெளியேற தீர்மானித்தால் அவர்களுக்கான பாதுகாப்பான வெளியேறும் வழியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |