ஹமாஸ் வெளியிட்ட இளம் பணயக்கைதி ஒருவரின் காணொளி... பெற்றோர் கூறிய அந்த விடயம்
ஹமாஸ் படைகளின் ஆயுதப்பிரிவான al-Qassam சனிக்கிழமை அன்று காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது.
உங்கள் சொந்த குழந்தை
குறித்த மூன்றரை நிமிட காணொளியானது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதில் 19 வயதேயான இராணுவ வீரர் Liri Albag தம்மை மீட்குமாறு ஹீப்ரு மொழியில் இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோருகிறார்.
இந்த நிலையில், Liri Albag-ன் பெற்றோர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்ரேல் பிரதமர், உலகத் தலைவர்கள் மற்றும் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்... உங்கள் சொந்த குழந்தைகளைப் போல முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளனர்.
காஸா எல்லையில் அமைந்துள்ள இஸ்ரேலின் Nahal Oz இராணுவத் தளத்தில் வைத்தே ஹமாஸ் படைகள் அப்போது 18 வயதான Liri Albag உட்பட 7 பெண் வீரர்களை சிறை பிடித்தனர். இதில் ஐவர் தற்போதும் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.
மக்களின் குற்றச்சாட்டாக
கடந்த 15 மாதங்களாக இஸ்ரேலிய பணயக்க்கைதிகள் தொடர்பில் பல்வேறு காணொளிகளை ஹமாஸ் படைகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இதுவரை பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கை எதையும் இஸ்ரேலின் நெதன்யாகு அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
2023ல் ஹமாஸ் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டின் போது 251 பணயக்கைதிகளை கைப்பற்றினர், அவர்களில் 96 பேர் காஸாவில் தற்போதும் உள்ளனர். 34 பேர்கள் இஸ்ரேல் இராணுவ நடவ்டிக்கையில் மரணமடைந்துள்ளதாக நெதன்யாகு அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுடன் ஒரு போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் கத்தாரில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.
முன்னதாக கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பல மாதங்களாகப் போரை முடிவுக்குக் கொண்டுவர முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |