போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா ஹமாஸ்? நெதன்யாகு பகீர் குற்றச்சாட்டு
ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதா ஹமாஸ்?
செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு, பல மாதத்திற்கு முன்பு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ஓபிர் ஸார்ஃபதி என்ற பிணைக் கைதி ஒருவரின் உடலை மீட்டு இருப்பதாக அறிவித்து இருந்த நிலையில், அதே பிணைக் கைதிகளின் உடலை தற்போது பாலஸ்தீன போராளி குழு மீண்டும் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்து இருப்பதன் மூல ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பாடான சூழ்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு நடைமுறையில் கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |