இஸ்ரேலிய பிணைக்கைதிகளை சவப்பெட்டிகளில் தான் திருப்பி அனுப்புவோம்., ஹமாஸ் எச்சரிக்கை
காசாவில் இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமாஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தாவிட்டால் பிணைக்கைதிகளை சவப்பெட்டிகளில் அடைத்து இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப் போவதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே தனது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
"இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஒப்பந்தம் இல்லாமல் இராணுவ அழுத்தத்தைப் பயன்படுத்தி பிணைக்கைதிகளை விடுவிக்க முயற்சித்தால், நாங்கள் அவர்களை சவப்பெட்டியில் திருப்பி அனுப்புவோம்" என்று காசிம் பிரிகேட்ஸின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறியதாக அல் ஜசீரா மேற்கோளிட்டுள்ளது.
பிணைக்கைதிகள் உயிருடன் திரும்ப வேண்டுமா அல்லது உடல்கள் மட்டும் திரும்ப வேண்டுமா என்பது இப்போது அவர்களின் குடும்பங்களின் கைகளில் உள்ளது.
பிணைக்கைதிகளின் மரணத்திற்கு நெதன்யாகுவும் அவரது இராணுவமும் தான் பொறுப்பு என்று ஹமாஸ் கூறியது.
பிணைக் கைதிகளை உயிருடன் கொண்டு வர முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hamas Israel conflict