இலங்கையில் வெடிக்காத கைக்குண்டு மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கைக்குண்டு கண்டெடுப்பு
இன்று பிற்பகல் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள வாய்க்கால் அருகே வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை சிறுவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு சிறுவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்ற, கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்.
வெடிகுண்டை அப்புறப்படுத்த கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவு வரும் வரை அப்பகுதியில் பொலிஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |