ரஷ்ய போரில் உயிரிழந்த உக்ரைனிய வீரர்கள்: எண்ணிக்கை வெளியிட்டு ஜெலென்ஸ்கி உருக்கம்
ரஷ்யாவுடனான போரில் இதுவரை எத்தனை உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
உக்ரைனிய வீரர்களின் உயிரிழப்பு விவரம்
கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போரானது நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இரு தரப்புகளும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு இருப்பதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட உக்ரைனிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய தகவலை அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் 2 என்ற தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல் படி, கிட்டத்தட்ட 55,000 உக்ரைனிய வீரர்கள் ரஷ்யாவுடனான ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது.
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை
உயிரிழந்த இந்த 55,000 பேரில், பயிற்சி பெற்ற தொழில்முறை ராணுவ வீரர்கள், கட்டாய ராணுவ பணியில் சேர்க்கப்பட்ட நாட்டு குடிமக்கள் என அனைவரும் உள்ளடங்குவர் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள்
உயிரிழந்தவர்கள் தவிர இன்னும் காணாமல் போன பலர் இருப்பதாகவும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ராணுவ ரகசியம் மற்றும் பொதுமக்களின் மன உறுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டே உக்ரைன் தங்களது ராணுவ வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை சுலபத்தில் வெளியே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |