நீங்கள் Hand Sanitizer பயன்படுத்துகிறீர்களா? மூளை செல்கள் பாதிக்க வாய்ப்பு
Hand Sanitizer-கள் மூளையில் உள்ள முக்கியமான துணை செல்களை சேதப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, அதில் பாதிக்கப்படாமல் இருக்க சானிடைசர்கள் (Hand Sanitizer) பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் சிலர் சானிடைசர்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சானிடைசர் பயன்படுத்துவதால் சில நன்மைகள் மற்றும் சில தீமைகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.
அந்தவகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் முக்கிய விடயம் தெரியவந்துள்ளது.
ஆர்கனோபாஸ்பேட்கள் (Organophosphates) மற்றும் குவாட்டர்னரி சேர்மங்கள் (quaternary compounds) மூளையில் உள்ள ஒலிகோடென்ட்ரோசைட் (oligodendrocytes) செல்களை அழிப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.
கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் மற்றும் துடைப்பான்கள் தவிர, பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும் பற்பசை (Toothpaste) மற்றும் மவுத்வாஷில் (Mouthwash) ஆர்கனோபாஸ்பேட்கள் மற்றும் குவாட்டர்னரி கலவைகள் காணப்படுகின்றன
ஆர்கனோபாஸ்பேட்டுகள், மூளைக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஆகும். இந்த இரசாயனங்கள், பொதுவாக ஜவுளி, பசைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மரச்சாமான்கள் போன்ற வீட்டுப் பொருட்களில் உள்ளன.
மனிதர்கள் கொழுப்பில் கரையக்கூடிய ஆர்கனோபாஸ்பேட்டுகளை தோல் வழியாக உறிஞ்சி மூளையை அடை வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hand Sanitizer, Tooth paste, Hand sanitisers may damage brain cells