பிரித்தானியாவில் இளம்பெண்ணும் தாயும் இறந்து கிடந்த விவகாரம்: உடற்கூறு ஆய்வு வெளிக்கொணர்ந்த உண்மை

Police investigation United Kingdom
By Balamanuvelan Oct 06, 2021 10:35 AM GMT
Report
207 Shares

பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரும் அவரது தாயும் இறந்துகிடந்த நிலையில், அந்த வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் வழக்கை திசை திருப்பும் வகையில் அமைந்திருந்தன.

பிரித்தானிய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவந்தவர் Dr சமன் மீர் சச்சார்வி (49).

தினமும் அவர் பாகிஸ்தானில் வாழும் தனது தாயிடம் தொலைபேசியில் பேசும் நிலையில், ஒரு நாள் மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

வீட்டிற்குள் சச்சார்வியும் அவரது மகள் வியன் மாங்ரியோவும் (14) பாதி எரிந்த நிலையில் சடலங்களாக கிடப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.

அப்போது, அந்த வீட்டிலுள்ள ஒரு சுவரில், ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர் பொலிசார்.

பிரித்தானியாவில் இளம்பெண்ணும் தாயும் இறந்து கிடந்த விவகாரம்: உடற்கூறு ஆய்வு வெளிக்கொணர்ந்த உண்மை | Handyman 51 Poisoned Doctor Daughter Jailed Life

ஆக, தாய்க்கும் மகளுக்கும் பிரச்சினை, மகளைக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்டது போன்ற ஒரு தோற்றம் அங்கு காணப்பட்டது.

ஆனால், உடற்கூறு ஆய்வில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகின. சச்சார்வி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருந்ததும் அவரது மகள் வியன் தலையணையால் அழுத்தப்பட்டு இறந்திருந்ததும் தெரியவந்தது.

எனவே, இந்த சம்பவத்தில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என முடிவு செய்த பொலிசார் வீட்டை ஆராய்ந்தபோது, அங்கு இரு மதுபான போத்தல்களும் ஐஸ்கிரீம் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த பொருட்களை Shahbaz Khan (51) என்பவர் வாங்கியது தெரியவந்தது. கட்டிட வேலை செய்யும் Khan, மருத்துவர் சச்சார்வி வீட்டில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

பிரித்தானியாவில் இளம்பெண்ணும் தாயும் இறந்து கிடந்த விவகாரம்: உடற்கூறு ஆய்வு வெளிக்கொணர்ந்த உண்மை | Handyman 51 Poisoned Doctor Daughter Jailed Life

2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி காலை 11.50க்கு Khan சச்சார்வி வீட்டுக்கு வந்திருக்கிறார். இரவு 10 மணிக்குத்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த விடயங்கள் சிசிடீவி கமெராவில் பதிவாகியுள்ளன.

அக்டோபர் 1ஆம் திகதி சச்சார்வியும் அவரது மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், குறிப்பிட்ட நாளில் Khan தன்னுடன் தான் இருந்தார் என்றும், பிறகு வேலைக்குச் சென்றுவிட்டார் என்றும் மாற்றி மாற்றி சொல்லியிருந்தார் அவரது மனைவியான Rabia Shahbaz (45).

பிரித்தானியாவில் இளம்பெண்ணும் தாயும் இறந்து கிடந்த விவகாரம்: உடற்கூறு ஆய்வு வெளிக்கொணர்ந்த உண்மை | Handyman 51 Poisoned Doctor Daughter Jailed Life

பொலிசாரின் கவனம் Khan மீது திரும்பிய நிலையில், அவரது வீட்டை சோதனையிடும்போது, அங்கு சச்சார்விக்கு சொந்தமாக நகைகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் பணமும் மறைத்துவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, சச்சார்வியையும் அவரது மகளையும் கொன்றுவிட்டு, பழியை அவர்கள் மேலேயே போட திட்டமிட்ட Khan, வீட்டுக்குள் ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதிவைத்திருக்கிறார் என்பது உறுதியானது.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, சச்சார்வியும் அவரது மகளும் மயக்கமடைந்து எதிர்த்துப் போராட முடியாத நிலையில், அவர்களைக் கொலை செய்துள்ளார் Khan. கொலை செய்துவிட்டு, தாய்க்கும் மகளுக்கும் சண்டை, அதனால் சச்சார்வி அவரது மகள் வியனைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் காட்ட முயன்றிருக்கிறார் அவர்.


கைது செய்யப்பட்ட Khan மற்றும், சம்பவம் நடந்தபோது தன் கணவர் தன்னுடன்தான் இருந்தார் என பொய்சாட்சி சொல்லிய அவரது மனைவி Rabia ஆகியோர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Khanக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி Rabiaவுக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Khan, பணத்துக்காக சச்சார்வியையும் அவரது மகள் வியனையும் திட்டமிட்டுக் கொலை செய்ததற்காக அவருக்கு ஆயுள்தண்டனையும், அவரது குற்றத்தை மறைக்க உதவியதற்காக அவரது மனைவிக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.  


மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US