வேலைக்கு செல்ல உயிரை பணயம் வைக்கும் இலங்கையர்கள்! வெளியான பரபரப்பு வீடியோ
இலங்கையில் ரயிலில் உயிருக்கு ஆபத்தான வகையில் மக்கள் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, நாடு முழுவதும் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஏப்ரல் 2 மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை ஏப்ரல் 4 அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 4) காலை 6 மணிக்கு ஊடரங்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இலங்கையர்கள் பலர் வேலைக்கு செல்ல உயிருக்கு ஆபத்தான வகையில் ரயிலில் பயணம் மேற்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர்.
ரஷ்ய வீரரை இழுத்தெறிந்த பெலாரஸ் பொலிஸ்! வெளியான வீடியோ ஆதாரம்
பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், மக்கள் ரயிலின் இன்ஜின் மற்றும் பெட்டியில் தொங்கிய படி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தொடரும் நெருக்கடி தனியார் துறைகளை நிலைகுலையச் செய்துள்ளது. அதேசமயம், எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் தங்களின் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Several office trains on mainline cancelled and this is how people returned to colombo after curfew. pic.twitter.com/eBaDtzQtO4
— Darshana Sanjeewa Balasuriya?️ (@sanjeewadara) April 4, 2022
இதன் காரணமாக இலங்கையர்கள் உயிரை பணயம் வைத்து ரயிலில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.