ரஷ்ய வீரரை இழுத்தெறிந்த பெலாரஸ் பொலிஸ்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்ய வீரரை போர் வாகனத்திலிருந்து பெலாரஸ் பொலிஸார் இழுத்தெறிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உக்ரைன் மீது 40வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் புடினின் நட்பு நாடான பெலாரஸிலிருந்து ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரேனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்பதாக உக்ரைன் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய வீரரை போர் வாகனத்திலிருந்து பெலாரஸ் பொலிஸார் இழுத்தெறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த சம்பவம் எங்கே எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் தெரியவில்லை.
கனடாவில் இலங்கை தேசிய கீதத்தை பாடியபடி கோட்டாபயவுக்கு எதிராக மக்கள் போராட்டம்! வீடியோ காட்சி
இணையத்தில் வெளியான வீடியோவில், ரஷ்யாவின் போர் வாகனங்களை குறிக்கும் ‘வி’ என குறியிடப்பட்டிருக்கும் டிரக்கை வழி மறிக்கும் பெலாரஸ் பொலிஸார். அதற்குள் இருக்கும் நபரை வாகனத்திலிருந்து இழுத்தெறிந்து, சாலையில் போட்டு கைது செய்கின்றனர்.
#Belarusian police pulled a #Russian soldier out of a military vehicle pic.twitter.com/baQ9GieUNW
— NEXTA (@nexta_tv) April 3, 2022
அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.